மாநகராட்சி சார்பில் பசுமை மதுரை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம்.

Published Date: June 3, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சியில் கலைஞரின் "பசுமை மதுரை திட்டம்" செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் மாநகராட்சியில் 100 வார்டுகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி வைகை தென்கரையில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து வைகை ஆற்றின் தென்கரை சாலை, யானைக்கல்  பகுதியில் இருந்து பேச்சியம்மன் படித்துறை வரை உள்ள பகுதிகள் மற்றும் புது ஜெயில் ரோடு ஆகிய பகுதிகளில் சுமார் 51 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதில் மாநகரபொறியாளர் அரசு, உதவி கமிஷனர் மனோகரன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பாளர் சாலி தளபதி, மகேஸ்வரன், கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயலட்சுமி, விஜயா, சோலைசெந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் (திட்டம்)கனி, உதவி பொறியாளர் ரமேஷ்பாபு உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 

Media: DAILYTHANTHI